deepamnews
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam

வாகன விபத்தில் சிக்கிய நிதி இராஜாங்க அமைச்சர்: காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதி

videodeepam

யாழ். உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

videodeepam