deepamnews
இலங்கை

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய கைதி ஒருவர் உயிரிழப்பு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி வெலிகந்த திரிகோண கந்த காட்டில் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இவரைச் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல நாட்களாக உணவருந்தாமல் இருந்த அவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் புனர்வாழ்விற்காக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்ட குழப்பத்தின் போது கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஜனாதிபதி ஆய்வு விஜயம்

videodeepam

இன்றுமுதல் பால் மாவின் விலை குறைப்பு – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானம்

videodeepam

200 இற்கும் மேற்பட்டவர்களுடன் மற்றுமொரு படகு கடலில் தத்தளிப்பு

videodeepam