deepamnews
இலங்கை

நீண்ட கால மின் உற்பத்தி திட்டத்தை நாடாளுமன்றத்தில்  சமர்ப்பித்தார் அமைச்சர் கஞ்சன விஜசேகர

நீண்ட கால மின் உற்பத்தி திட்டம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் தொடக்கம் இந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற எரிபொருள் இறக்குமதி தொடர்பில் விரிவான அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவில் இருந்து மின் உற்பத்தியை 70 சதவீதமாக அதிகரித்தல் மற்றும் புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் இந்த நீண்ட கால மின்னுற்பத்தித் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடடுள்ளார்.

Related posts

இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – மின்சக்தி  அமைச்சு அறிவிப்பு

videodeepam

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – யாழ். இந்து மகளிர் பாடசாலை மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துச் சாதனை.

videodeepam

யாழில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

videodeepam