deepamnews
சர்வதேசம்

2000 கைதிகளை ‘மெகா’ சிறையில் அடைப்பு –  குற்றச்செயல்களை ஒடுக்க எல் சல்வடோர் அதிபர் கடுமையான நடவடிக்கை

எல் சல்வடோர் அதிபர் Nayib Bukele குற்றச்செயல்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

குற்றத்திற்கு எதிரான போர் என தனது நடவடிக்கைகளுக்கு பெயரிட்டிருக்கும் அதிபர் Nayib Bukele, குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 2000 பேரை புதிதாக கட்டப்பட்டுள்ள சிறைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

இந்த மிகப்பெரிய சிறை (Mega Prison) குற்றச்செயல்களை ஒடுக்க சுய பிரகடனம் செய்துள்ள அந்நாட்டின் அதிபர் Nayib Bukele-இன் மையப் புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அடைக்க முடியும்.

இது வடக்கு, தெற்கு, மத்திய அமெரிக்க நாடுகளில் இருக்கும் சிறைகளிலேயே மிகப்பெரிய சிறை என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

எல் சல்வடோரில் கொலைகளும்  வன்முறைக் குற்றங்களும் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

பச்சை குத்தப்பட்டவர்களை வெறுங்காலுடனும் பிணைக்கப்பட்ட சங்கிலிகளுடனும்  புதிதாக திறக்கப்பட்ட சிறைக்கு கொண்டு செல்லும் புகைப்படங்களை எல் சல்வடோர் அரசு வெளியிட்டுள்ளது.

கைதிகள் தங்கள் அறைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, மொட்டையடிக்கப்பட்ட தலைகளுடன், பின்னால் கைகளை கட்டிக்கொண்டு நெருக்கமாக அமர வைக்கப்பட்டுள்ளனர்.

விடியற்காலை வேளையில், ஒரே தடவையில் 2000 கைதிகள் பயங்கரவாத தடுப்பு மையமான குறித்த சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிபர் Nayib Bukele ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இது அவர்களின் புதிய வீடாக இருக்கும், இங்கு அவர்கள் பல ஆண்டுகளுக்கு வாழ்வார்கள், இதனால் மக்களுக்கு மேலும் எந்த தீங்கும் ஏற்படுத்தப்படாது” என அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்பு

videodeepam

உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது

videodeepam