deepamnews
இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு – ரூபாவின் பெறுமதி மீண்டும் ஸ்திரமடையும் அறிகுறி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகின்றது.

நேற்றைய தினம் அரசாங்கத்தின் முக்கிய வங்கிகளில் ஒரு டொலரின் கொள்வனவு விலை 353 ரூபாவாக அமைந்ததுடன், அதன் விற்பனை விலை 363 ரூபா 30 சதமாக காணப்பட்டது.

இதேவேளை, ஒருசில தனியார் வணிக வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாவாக பதிவானது.

மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மூன்று தனியார் வங்கிகளுக்கு 400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற வசதியை வழங்குவதற்கு உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு அமைப்பு தீர்மானித்தது.

இந்த நாணய பரிமாற்ற வசதி ரூபாவின் பெறுமதி ஓரளவு ஸ்திரமடைவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததினம்.

videodeepam

பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி திட்டம்

videodeepam

2023 இல் இலங்கை உலகநாடுகளிடம் கையேந்தக்கூடாது என்கிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

videodeepam