deepamnews
இலங்கை

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததினம்.

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைந்துள்ள அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவசிலை வளாகத்தில் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினரால் விசேட நிகழ்வுகள் இன்று காலை 7மணியளவில் முன்னெடுக்கபட்டது.

இதன்பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக் கட்சி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால், 96 ஆவது அகவையை நினைவுறுத்தும் முகமாக கேக்வெட்டி , அமிர்தலிங்கத்தின் திருவுருவசிலைக்கு மலர்மாலையும் , மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினர், பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணிசெயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது முக்கியம்

videodeepam

சாதாரணதரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி: வினாத்தாள் விநியோகம் ஆரம்பம்

videodeepam

அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

videodeepam