நேற்று மாலை 7 மணிக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்காக தொழில்சார் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமாகாண அரச வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதால், சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.