deepamnews
இந்தியா

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி மனோஜ்பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ்பாபு முன் அவசர வழக்குகளாக நேற்று  விசாரணைக்கு வந்தன.

அப்போது மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மணிசங்கர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று விட்டு மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது எனவும், வேட்புமனு தாக்கல் இன்று மாலை நிறைவு பெற்று விட்டதாக கூறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்பதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தையும் எதிர்த்துள்ளதால், ஏப்ரல் 11 ஆம்  திகதிக்கு தள்ளிவைக்கப்பட்ட வழக்குகளை, எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டு முடிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, அத்தனை வழக்குகளையும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தேர்தல் நடைமுறைகளை தொடர அனுமதித்த நீதிபதி, தீர்மானத்தை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை, தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.

Related posts

சென்னையை வந்தடைந்த பிரதமர் – விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை திறந்துவைத்தார்

videodeepam

இஸ்லாமிய அமைப்புக்கு இந்திய அரசு தடை – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

videodeepam

நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்

videodeepam