deepamnews
இந்தியாசினிமா

நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல்

பிரபல நடிகர் மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் தமது 57 அவது வயதில் காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவருக்கு  இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,  குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும்முன்பே அவரின் உயிர் பிரிந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர். மயில்சாமியின் இறப்புக்கு திரையுலகைச்சேர்ந்த பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார்.

1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுமுதல் சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி பேச்சு!

videodeepam

முதல்முறையாக அதிமுக கொடி இல்லாத காரில் பயணித்த ஓபிஎஸ்.

videodeepam

200 கிலோ ஹெரோயினுடன் ஈரான் படகு கொச்சியில் சிக்கியது

videodeepam