deepamnews
இலங்கை

வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை விடுபட்டதால் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர பெருமிதம்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் நாடு முழுவதும் மக்கள் பட்டாசு கொளுத்தியது கடன் கிடைத்த காரணத்தினால் அல்ல என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு வருடமாக இருந்து வந்த வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை விடுபட்டதால் மக்கள் அவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்வதன் முக்கிய நன்மை இலங்கை கடனைப் பெறுவதை விட திவால் நிலையில் இருந்து விடுபட்டுள்ளது எனவும் தற்போது இலங்கையிலுள்ள வங்கிகளின் கடன் கடிதங்களை வெளிநாட்டு வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். .

இதன் மூலம் எரிபொருள், மருந்துகள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவை சந்திக்க ஜனாதிபதி திட்டம்

videodeepam

சடுதியாக வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை..!

videodeepam

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி.

videodeepam