deepamnews
இலங்கை

பிடுங்கி வீசப்பட்ட ஆதி சிவனை உரிய இடத்தில் அரசு நிறுவ வேண்டும் – மறவன்புலவு கோரிக்கை

வெடுக்குநாறி ஆதி சிவனை பிடுங்கி வீசியதை கண்டுப்பதோடு அரசு வேடிக்கை பார்க்காமல் உரிய இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவ சேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்தார்.

நேற்றய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். இந்து கல்லூரி மைதானத்திற்கு அருகாமையில் இடம் பெற்ற வெடுக்குநாறி ஆதி சிவன் பிடுங்கி வீசப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இந்துக்களின் புனித ஸ்தலங்கள் தொடர்ச்சியாக மத வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வருகிறது.

மட்டக்களப்பில்  காளி கோயிலை இடித்து மீன் சந்தை அமைப்பேன் என முஸ்லிம் அரசியல்வாதி கூறிய போது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

திருக்கேதீஸ்வர வளவை கிறிஸ்தவர்கள் உடைத்த நிலையில் அரசு அதனை இன்னும் கட்டிக் கொடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில் அமைதியான சூழலை விரும்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பிடுங்கிய  ஆதி சிவனை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சிவ சேனை தொண்டர்கள் உருத்தின சேனை அமைப்பின் தொண்டர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

videodeepam

போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உள்ளிட்ட இருவர் கைது!

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நீதிமன்றம் செல்வோம் : ஜி.எல்.பீரிஸ்

videodeepam