deepamnews
இலங்கை

நாட்டில் கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும்- சஜித் தெரிவிப்பு

எமது நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களை வெளிநாட்டு உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிஸ்டர் சிட்டி நட்பு எண்ணக்கருவின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என தான் கூறும் போது, இது குறித்த சரியான புரிதல் இல்லாத இந்நாட்டிலுள்ள ஒரு சில அறிவீனர்கள் கேலி செய்வதாகவும், எவர் எவ்வாறான கேலி செய்தாலும், இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைக்கப்பட்டு நாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் நகரங்களை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுனாமிப் பேரலையால் நம் நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகள் அழிவுக்குட்பட்ட போது, வெளிநாடுகளிலுள்ள பாடசாலைகளில் இருந்து பிள்ளைகள் பணம் சேகரித்து நமது நாட்டில் பாடசாலை கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்ப உதவினார்கள் என்றுதான் அவ்வாறு கேலி செய்பவர்களிடம் கூற வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிய எண்ணக்கருக்களை, புதிய போக்குகளை, புதிய திட்டங்களை வகுத்து அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த பிரபஞ்சம் எண்ணக்கரு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பந்தோட்டை வீரவில எம். ஆர்.தாஸிம் முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பிரபஞ்சம் திட்டத்தின் 25 ஆவது கட்டத்தின் கீழ் டிஜிடல் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி

videodeepam

யாழில். தனியார் விடுதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு

videodeepam

77 கோடி ரூபாவுக்கு நிதியமைச்சிலிருந்து பதில் இல்லை – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam