சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வருமானத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் பொருளாதார, சமூக உரிமைகள் மேலும் சிதைக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் எனவும் ஊழல் எதிர்ப்பு சீர்திருத்தங்கள் மூலம் பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
செல்வந்தர்கள் சிலருக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களே இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்றாடம் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களின் மீது சுமையை ஏற்படுத்தக்கூடாது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.