deepamnews
இந்தியா

கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழப்பு –  இந்திய மத்திய பிரதேசத்தில் நடந்த சோகம்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வழிபாட்டுத்தலமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்து பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த சம்பவம் நேற்று முன்தினம்  (30)  பதிவாகியுள்ளது.

இந்தூர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமற்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கிணற்றுக்கு மேல் வழிபாடுகளில் ஈடுபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கிணற்றுக்கு மேலேயுள்ள கொங்ரீட் தளமொன்றில் பக்தர்கள் ஏறி நின்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனால், பாரம் தாங்காமல் கொங்ரீட் தளம் உடைந்ததிலேயே இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு 200,000 ரூபா இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி பேச்சு!

videodeepam

இந்தியா – சீனா இடையே பதற்றம் – நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம்.

videodeepam

தமிழகம் பாலமேடு பகுதியில் இடம்பெற்ற  ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலி

videodeepam