deepamnews
சர்வதேசம்

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது

இல்சா சூறாவளி மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம் என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.

தற்போது தென்பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ள இல்சா தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வேகமானதாக மாறும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 வருடங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய மிகவும் ஆபத்தான சூறாவளியாக இது காணப்படும்.

மரங்கள் விவசாயம் இயற்கைக்கு பெரும் சேதம் ஏற்படப்போகின்றது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உரியவிதிமுறைப்படி கட்டப்படாத வீடுகள் கடும் காற்றினால் பாதிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

உக்ரேனுக்கு லெப்பர்ட் 2 ரக தாங்கிகளை விநியோகிக்க ஜேர்மனி அனுமதி

videodeepam

நோர்வே கடற்பரப்பு மீது 14 மணிநேரம் பறந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானம் – எழுந்துள்ள அச்சம்

videodeepam

பிரான்ஸில் அரச பாடசாலைகளில் மாணவிகள் அபாயா அணிய தடை!

videodeepam