deepamnews
இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு – சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் வாக்குறுதி

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்துடன் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு பொறியியலாளர்கள் சங்கம் அமைச்சரிடம் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சேவைக் கொடுப்பனவுகள், ஓய்வூதிய சம்பளம் ஆகியன தொடர்பிலும், புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் கொள்முதல் திட்டமிடல் செயற்பாடுகள் ஆகியன தொடர்பிலான யோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

தமிழரசுக் கட்சியின் மாவட்டக்கிளை தெரிவு!

videodeepam

மன்னார் மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணிவிழா

videodeepam

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபத்தின் நினைவேந்தலினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

videodeepam