deepamnews
இலங்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளான பிரஜைகளின் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை என்பன குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்களால் இரத்து செய்யப்பட்டமைக்கு இலங்கை சமூகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாக நிபுணர் குழு மூலம் இந்த சட்டமூலத்தில் உள்ள பொருத்தமற்ற சரத்துக்களை நீக்குவது பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவால் பொதுஜன பெரமுன சீர்குலைந்து – ரோஹித அபேகுணவர்தன குற்றச்சாட்டு

videodeepam

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை – ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு

videodeepam

கடன் மறுசீரமைப்பு பேச்சு : ஐரோப்பா செல்கின்றார் ஜனாதிபதி

videodeepam