முடிசூட்டு விழாவை முன்னிட்டு பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் ராணி காமிலாவின் புதிய புகைப்படங்கள் வெள்ளிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையினால் வெளியிடப்பட்டுள்ளன.
மூன்று புகைப்படங்கள் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள நீல ஓவிய அறையில் கடந்த மாதம் புகைப்படக் கலைஞர் ஹ்யூகோ பர்னாண்ட் என்பவரால் எடுக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு புகைப்படத்தில், சார்ள்ஸ் 1828 இல் கில்டட் மகோகனி மரம் மற்றும் பச்சை பட்டு மெத்தை கொண்ட நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
அதேநேரத்தில், கமிலா 1812 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கில்டட் மரம் மற்றும் நீல பட்டு மெத்தை கொண்ட நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
பக்கிங்ஹாம் அரண்மனை வலைத்தளத்தின்படி, 1855 ஆம் ஆண்டில் தற்போதைய போல்ரூம் (பக்கிங்ஹாம் அரண்மனையின் பெரிய அறை) உருவாக்கப்படுவதற்கு முன்பு நீல நிறத்திகால் அலங்கரிக்கப்பட்ட அறை முதலில் அரண்மனை போல்ரூமாக செயல்பட்டது.
1911 ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்ட பிறகு வரையப்பட்ட ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் மாநில உருவப்படம் புகைப்படங்களின் பின்னணியாக உள்ளது.
புகைப்படக் கலைஞர் ஹ்யூகோ பர்னாண்ட் 2005 இல் சார்லஸ் மற்றும் கமிலா மற்றும் 2011 இல் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகிய இருவரின் திருமணங்களையும் புகைப்படம் எடுத்தவர் ஆவார்.