முற்றுகையிடப்பட்டுள்ள பாக்முட் நகரை கைப்பற்றுவதற்காக பொஸ்பரஸ் வெடிமருந்துகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைனின் இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஆளில்லா விமான கருவிகளில் பதிவு செய்யப்பட்ட காணொளி காட்சிகளுக்கு அமைய, குறித்த நகரத்தின் மீது வெள்ளை நிறத்திலான பொஸ்பரஸ் தூவப்படுகின்ற சம்பவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை
எனினும் பொதுமக்கள் உள்ள பகுதிகளில் அவற்றைப் பயன்படுத்துவது போர்க் குற்றமாகக் கருதப்படுகிறது.
அவை வேகமாக பரவும் தீயை உருவாக்குகின்றன
அவ்வாறு உருவாகும் தீயை கட்டுப்படுத்துவது கடிமானதாக அமைவதுடன் ரஷ்யா முன்னரும் அவற்றைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
பல மாதங்களாக பாக்முட்டை கைப்பற்றுவதற்கு ரஷ்யா முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.