deepamnews
சர்வதேசம்

அமெரிக்காவில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 10 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 10.22 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 60,000 க்கும் அதிகமான ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் நகரமான மான்டேரி பார்க் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நகரம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல சுற்று வெடிமருந்துகளுடன் கூடிய இயந்திரத் துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், ஒரு களியாட்ட விடுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிதாரி, ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பெண்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு தலிபான்களிடம் ஜி7 வலியுறுத்தல்

videodeepam

நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் வழங்குநர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜி 20  அமைப்பு வலியுறுத்தல்

videodeepam

உக்ரைனின் 8 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!

videodeepam