deepamnews
இலங்கை

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை உத்தியோகப்பூர்வ விஜயமாக சவூதி அரேபியா செல்கிறார்

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை   உத்தியோகப்பூர்வ விஜயமாக சவூதி அரேபியா செல்லவுள்ளார்.

சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசால் பின் ஃபர்ஹான் அல் சௌத்தின் அழைப்பின் பேரில் அலி சப்ரி நாளை சவூதி அரேபியா பயணமாகவுள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சவூதி அரேபியாவில் தங்கவுள்ள வெளிவிவகார அமைச்சர், இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடனும்  அலி சப்ரி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சேற்றில் புதைந்து உயிருக்கு போராடும் யானையை மீட்கும் பணிகள் தீவிரம்!

videodeepam

பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது .

videodeepam

புத்தாண்டு காலத்தில்  காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடையும் – சமிந்த பீரிஸ் தெரிவிப்பு

videodeepam