deepamnews
இலங்கை

யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு

யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் நேற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

முன்னாள் மேயரான இம்மானுவல் ஆர்னோல்ட் யாழ். மாநகர சபையின்  மேயராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  வெளியான வர்த்தமானி அறிவிப்பை அடுத்தே அவர் நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ். மாநகர சபைக்கு புதிய மேயரை தெரிவு செய்வதற்காக கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம், மேயர் தெரிவு இடம்பெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் படி யாழ். மாநகர சபையின் புதிய மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும்

videodeepam

எஸ். ஜெய்சங்கர் இன்று முக்கிய பேச்சு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்கிறார்

videodeepam

சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ள மாட்டேன் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.

videodeepam