deepamnews
இலங்கை

வடகிழக்கில் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் ரணில் – விமல் வீரவன்ச தெரிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க, தெற்கில் பௌத்த பற்றாளர் போன்று செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியில் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கைபொம்மையாக செயற்படுகிறார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் செய்கிறார். நாட்டு மக்கள் ஒருபோதும் ரணிலை அரச தலைவராக தெரிவு செய்யமாட்டார்கள்.

மகாவலி அதிகார சபையை இரத்து செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாவலி அதிகார சபையை இரத்து செய்தால் அதன் பொறுப்பாக்கத்தில் உள்ள அரச காணிகள் பிரதேச சபைகளுக்கு உரித்தாகும்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் பிரதேச சபை அதிகாரிகள் தமக்கு இணக்கமானவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்துக் கொள்வார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் இதனையே எதிர்பார்க்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

videodeepam

குருந்தூர் சிவன் கோவில் வழக்கு: தென்கைலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை

videodeepam

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாவது தடவையாக மீண்டும் ஒத்திவைப்பு

videodeepam