deepamnews
இந்தியா

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது

முன்னதாக புதிய நாடாளுமன்ற திறப்பை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோல் முன் பிரதமர் மோடி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.

செங்கோலை நிறுவிய பின்னர் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டார்.

நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகின்றன.

அதில் மே 28 என்ற நாள். புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும் என்று மோடி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டடம் அல்ல, 140 கோடி இந்திய மக்களின் இலட்சியத்தின் சின்னம்.

இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது” என மோடி தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவின், புதிய நாடாளுமன்ற கட்டடத் தொகுதி திறப்பு விழாவை, தமக்கான முடிசூட்டும் நிகழ்வாக, பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற திறப்புவிழா குறித்து, தமது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழக யாசகர் இலங்கைக்கு அளித்த இறுதி நன்கொடை

videodeepam

விசாகப்பட்டினத்தில் ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

videodeepam

‘ஒன்று கூடுவோம்’ என நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்

videodeepam