இலங்கையின் இறையாண்மை மற்றும் சமூக பொருளாதாரத்திற்காக, சீனா எப்பொழும் முன்னிற்கும் என, அந்த நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சென் வெய் டாங், தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன், அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின், வர்த்தக, துறைமுக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில், முதலீடுகளை அதிகரிக்க, சீனா எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அந்த நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சென் வெய் டாங், கூறியுள்ளார்.