deepamnews
இலங்கை

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் – வெளியானது புதிய விலை பட்டியல்

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 385 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாக அமைந்துள்ளது.

மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் புதிய விலை 245 ரூபாவாகும்.

இலங்கை தொழில்நுட்ப மண்ணெண்ணெயின் விலையும் 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 270 ரூபாவென மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க கூறினார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி விடுவிப்பு விவகாரம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு

videodeepam

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பாக சமரச நடவடிக்கை!

videodeepam

இலங்கையில் வறுமை நிலை இரட்டிப்பாக அதிகரிப்பு – உலக வங்கி அறிக்கை

videodeepam