உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கை ஒரு வருடங்களை கடந்தும் தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் நாளுக்கு நாள் தாக்குதல்கள் உக்கிரமடைந்து வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் தற்போது உக்ரைனின் முக்கியமான நதியான டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
இதனால் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது.
அதேவேளை கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றனர்.
இதற்கிடையே, ககோவ்கா அணையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக 150 டன் என்ஜின் ஆயில் டினிப்ரோ ஆற்றில் கலந்து விட்டதாகவும், இதனால் சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் உக்ரைன் எச்சரித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரி டரியா ஜரிவ்னா தெரிவிக்கையில்,
150 டன் என்ஜின் ஆயில், குண்டு வெடிப்பின் காரணமாக டினிப்ரோ நதியில் பாய்ந்து கலந்து விட்டது என்றார். மேலும் 300 டன் எண்ணெய் ஆற்றில் கலக்கும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணெய் ஆற்றில் கலப்பதின் விளைவாக இப்பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால மற்றும் மாற்ற முடியாத சேதாரத்தை ஏற்படுத்தி விடும் என உக்ரைனின் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிகரித்து வரும் நீரின் அளவால் நோவா காகோவ்கா மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.