60 மருந்துகளின் ஆகக்குறைந்த சில்லறை விலையை, 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒளடத விலை திருத்தம், மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.