உக்ரைனின் கேர்சன் நகரில் நொவா ககோவ்கா அணை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதால் பாரியசுற்றுசூழல் பேரழிவு ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அணை முற்றாக அழிக்கப்பட்டுள்ளதை பேரழிவை சுற்றுச்சூழலிற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய குண்டுவெடித்ததை போன்றது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கேர்சன் நகரில் உள்ள அணை அழிக்கப்பட்ட பின்னர் அந்த பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துவருகின்றது.
சுமார் 1400 பேர் அந்த பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
பல நகரங்களும் விவசாயநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன,
உக்ரைனும் ரஸ்யாவும் இந்த அழிப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.எனினும் இரு தரப்பும் உறுதியான ஆதாரங்களை முன்வைக்கவில்லை.
எனினும் ஜெலென்ஸ்கி ரஸ்யாவே இதற்கு பொறுப்பு என குற்றம்சாட்டியுள்ளார்.உக்ரைன் அதிகாரிகள் இதனை வேண்டுமென்றே சூழலை அழித்த சம்பவம் என்ற கோணத்தி;ல் விசாரணை செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெருந்துயரின் விளைவுகள் ஒருவாரத்திற்கு பின்னரே தெரியவரும் நீர் வடிந்ததும் என்ன மிச்சமுள்ளது என்பது தெரியவரும் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகள் விவசாய நிலங்கள் குடியேற்றங்கள் மற்றும் நீர்விநியோகம பாதிக்கப்படுவது குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன.
ஆற்றில் உள்ள மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து கசிந்த எண்ணெய் மற்றும் இரசாயனங்கள் குறித்தும் கரிசனைகள் வெளியாகியுள்ளன.