deepamnews
சர்வதேசம்

பிரான்சில் சிறுவர்களை இலக்குவைத்து கத்திக்குத்து தாக்குதல் – ஏழுபேர் படுகாயம்

பிரான்சில் இனந்தெரியாத நபர் ஒருவர் நேற்று மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிரென்ஞ் அல்ப்ஸில் உள்ள அனெசை என்றபகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்றுவயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இலக்குவைத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்திற்கு இலக்கானவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உக்ரேனுக்கு லெப்பர்ட் 2 ரக தாங்கிகளை விநியோகிக்க ஜேர்மனி அனுமதி

videodeepam

அமெரிக்க வரலாற்றில் இருள் சூழ்ந்த பக்கம் – கைதுக்கு பின்னர் டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு

videodeepam

கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் தீப்பரவல் – 3 பேரை காணவில்லை

videodeepam