deepamnews
இலங்கை

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டிற்கு வாருங்கள் –   ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்த அரசாங்கத்தின் 123 பேரையும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, இந்நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் போது இதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அரசியல் தந்திரங்களை பிரயோகிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் கூறுகின்றோம் என தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, பாராளுமன்ற  உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“ 7 மாதங்களுக்கு முன் சர்வகட்சி மாநாட்டை அழைத்தது எமக்கு ஞாபகம் இருக்கின்றது. 7 மாதங்கள் கழித்து மீண்டும் அழைப்பதற்கு காரணம் தெரியவில்லை. அது நேர்மையான நோக்கத்தில் நல்லெண்ணத்தில் அழைக்கப்பட்டதா? அல்லது குறுகிய கால அரசியல் இலாபங்களுக்காக அழைக்கப்பட்டதா, இன்றேல்  அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு அழைக்கப்பட்டதா? என்ற கேள்வி எமக்குள்ளது” என்றார்.

  பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி பேசினார், ஆனால் அது  1987 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும். இப்போது பாராளுமன்றத்தில் உள்ள தரப்புக்கு இது சார்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் இல்லை.இப்போது நிறைவேற்று அதிகாரமும் ஜனாதிபதியும் அமைச்சரவையும் அதனை நடைமுறைப்படுத்துவதே எஞ்சியுள்ள பணியாகும் என்றார்.

 13 க்கு அப்பால், 13+ தருவதாக கூறிய மஹிந்த ராஜபக்ச அணியினர் தான் இன்று ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதிக்கு பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன் என்றார்.

பதின்மூன்றாவது திருத்தம் அடிப்படையில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பிரதேச மக்களுக்கும் மாகாண சபை முறைமையின் ஊடாக தமது மாகாணத்தை நிர்வகிக்க வாய்ப்பாக வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் முன்னைய நிர்வாகத்திலும், தற்போதைய நிர்வாகத்திலும் ஆறு வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை,இதற்கு என்ன காரணம் என்றும் அவர் கேட்டார்.

Related posts

இலங்கை புதிய தொழில் உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: மத்திய வங்கி ஆளுநர் புதிய ஆலோசனை

videodeepam

எரிபொருள் சந்தையில் மேலும் ஒரு நிறுவனம் பிரவேசம் – ஒப்பந்தம் கைச்சாத்தானது

videodeepam

சிவாஜியின் நூல் வெளியீட்டில் இந்திய துணைத் தூதுவருக்கு ஆசனம் வழங்காத ஏற்பாட்டாளர்கள்.

videodeepam