அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாஸவுக்கு அதிகமானோர் ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களித்திருந்தனர். எனினும், அவரால் ஜனாதிபதியாக வர முடியவில்லை.
பிரதமர் பதவியைக் கூடப் பெறுவதற்கு அவர் தயக்கம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றில் ஒருவர் மாத்திரமே இருந்தார். அவரால் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிந்துள்ளது.
எனவே, அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.