deepamnews
இலங்கை

போதுமான அளவு அரிசி கையிருப்பில் – அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிப்பு.

தம்மிடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சில தரப்பினர் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தம்மிடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் உள்ளதாக ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில், நீர் உள்ளதுடன், 6 மாதங்களின் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஆராய முடியும் எனவும் ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வீ.கே ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related posts

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டமே தவிர சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – சுகாஸ் தெரிவிப்பு

videodeepam

மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைப்பு

videodeepam

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையே சந்திப்பு

videodeepam