deepamnews
இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் – சி.வி.கே.சிவஞானம்.

அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையின் தற்போதைய நிலையை ஐ.நாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்றையதினம் (23) தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு விடயங்கள் பேசப்பட்டது பாராளுமன்றத்திற்கு இந்த விடயங்களை பாரப்படுத்த வேண்டிய தேவையில்லை, அரசியலமைப்பில் இருக்கின்ற விடயங்களை ஜனாதிபதி அமுல்படுத்த முடியும். ஆனால் அவரே 13ஆம் திருத்தத்தை நான் அமல் படுத்துவேன் என்று சொல்லுகிரார்,   அப்படி இல்லை என்று எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமையை இல்லாத செய்ய சொல்லுகின்றார்கள். இதை பார்க்கும்போது அவரே மறைமுகமாக இதனை சொல்லி இருக்கின்றார் என தெரிகிறது. 

வரி விதிப்பை பொருத்தவரை கோட்டபாயவிற்கும் தவறான ஆலோசனை வழங்கப்பட்டு தான் பொருளாதாரப் பிரச்சினை நாட்டுக்கு வந்தது, தற்போது இவர்களும் கல்விமான்கள், வைத்தியர்கள் போன்றோருக்கு புதிதாக வரி விதிப்பதன் மூலம் அவர்கள் வெளிநாடு போகின்ற போது மக்களையே பாதிக்கப் போகிறது. ஆனபடியால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த விடயங்களை இனி ஐக்கிய நாடுகள் மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

Related posts

மதங்கள் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும் – சிறீதரன் எம்.பி வேண்டுகோள்

videodeepam

சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம்!

videodeepam

ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் நாள் அறிவிக்கப்படும்

videodeepam