deepamnews
இலங்கை

தவறான முடிவாள் இளைஞன் உயிறிளப்பு !

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் வீட்டில் பணம் கேட்டு சண்டையிட்டதுடன், தண்ணீர் இறைக்கும் மோட்டாரை கிணற்றினுள் தூக்கி வீயுள்ளார். அத்துடன் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று மதியம் வீட்டிற்கு அருகேயுள்ள காணி ஒன்றில் உள்ள விளாத்தி மரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் போதைக்கு அடிமையானவர் என அறியமுடிகிறது.

அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அருளானந்தம் லக்ஸன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

தலைமைத்துவத்தை ஏற்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் : இல்லாவிட்டால் எதிர்கால சந்ததியினருக்கு எதுவும் மிஞ்சாது 

videodeepam

இலங்கையில் நிறுவனரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் – பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவிப்பு 

videodeepam

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam