deepamnews
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்து சமய அறநெறிக் கல்வியை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் ( 26) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.30 மணியளவில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிக் கல்வி அபிவிருத்திப் பேரவை உருவாக்கம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் பேரவையும் உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அனிருத்தனன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.லிங்கேஸ்வரன், பிரதம கணக்காளர் திரு.ம. செல்வரட்ணம், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து சமய அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

Related posts

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது

videodeepam

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம் இடம்பெறக்கூடாது – நாமல்

videodeepam

நெடுந்தீவு படுகொலை – சந்தேக நபரை 48 மணி நேர விசாரணைக்குட்படுத்த அனுமதி!

videodeepam