deepamnews
சினிமா

ஜெயிலர் படத்திற்கு இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம்..

ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்து, உலகளவில் ரூ. 500 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

கண்டிப்பாக இப்படம் ரூ. 600 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு வெற்றிக்கு நெல்சன் எந்த அளவிற்கு காரணமோ அதே அளவிற்கு அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் காரணம்.

ரஜினிக்காக நெல்சன் வைத்த ஒவ்வொரு காட்சிகளையும் தனது பின்னணி இசையின் மூலம் மாஸாக காட்டியவர் அனிருத். இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு இசையமைக்க ரூ. 7 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் அனிருத்.

Related posts

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்

videodeepam

உலகளவில் இதுவரை ஜெயிலர் படம் ரூ. 611 கோடிக்கும் வசூல் செய்துள்ளதாக தகவல்.

videodeepam

தமிழ் சினிமா சிலர் கட்டுப்பாட்டில் இருக்கிறது – லட்சுமி ராமகிருஷ்ணன்.

videodeepam