deepamnews
இலங்கை

திருகோணமலை இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – நீதிமன்றம் தடை உத்தரவு.

திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு விதிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி தடை விதித்துள்ளார்.

இதன் அடிப்படையில், தடை விதிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.

Related posts

சுண்டிக்குளம் பறவைகள் சாரணாலயத்தின் கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வு.

videodeepam

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு – புறக்கணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி..!

videodeepam

சீன வீட்டுத் திட்டம் அரசியல் நோக்கமாக இருக்கக் கூடாது – இடைநடுவில் உள்ள வீட்டுத் திட்டத்தை முழுமை படுத்துங்கள்

videodeepam