நாட்டை, உலகை திரும்பி பார்க்க வைக்கும் மலையக தமிழன் என்று சொல்லுங்கள் என்றும் தடை செய்யப்பட்ட வார்த்தை பிரயோகம் வேண்டாம் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிரிகட் வீரர் முத்தையா முரளிதரனிடம் தெரிவித்துள்ளார்.
கிரிகட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சரிதம் என்ற அடிப்படையில் வெளிவர உள்ள 800 என்ற திரைப்பட்டத்தின் முன்னோட்ட காணொளியில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய சொற்பிரயோகம் தொடர்பில் மனோ எம்பி வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்நாட்டு இந்திய வம்சாவளி மலையக தமிழர் மத்தியில், தடை செய்யப்பட்ட வார்த்தையை உங்கள் திரைப்பட முன்னோட்ட “ட்ரெயிலரில்” பயன்படுத்த வேண்டாம்.
அந்த வார்த்தையை நானே நேரடியாக தடை செய்து காட்டியுள்ளேன். கதையம்சத்துக்கு தேவை என என்னிடம் கதைவிட வேண்டாம். நானே ஒரு கதாசிரியர். எனக்கு இது தெரியும்.
அந்த இடத்தில் “நாட்டை திரும்பி பார்க்க வைத்த மலையக தமிழன்” என்று போடுங்கள். சரியாக வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.