தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும், அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.தைட்டியில் நேற்று இடம்பெற்ற காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்து விகாரைக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போது அதனை தடுத்து நிறுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல பேர் இங்கே திரண்டு அளவீட்டு விடயத்தை தடுத்திருக்கின்றார்கள்.
மிக முக்கியமாக மக்கள் இங்கு திரண்டதாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்கள் வருகை தந்ததாலும் இந்த அளவீட்டு திட்டம் நிறுத்தப்பட்டதாக உணரப்படுகிறது.
இருந்தாலும் கூட இதற்கான மாற்றீட்டு காணி அல்லது வேறு இடங்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தைகள்,
மிக முக்கியமாக இந்த மக்களுடைய காணி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
எந்தவித அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இந்த விகாரை அகற்றப்பட்டு காணி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதுதான் இந்த மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.