deepamnews
இலங்கை

தொடரும் மயிலத்தமடு போராட்டம் – தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் கால்நடைகள் உயிரிழந்த பின்னரா மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு வழங்கப் போகின்றது என பண்ணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காது ஏமாற்றிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை அரசின் பேரினவாத சக்திகளினால் தமிழர் தாயகப் பகுதியில், திட்டமிட்டு அரங்கேறி வரும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக , மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை காணப்படுகின்றது.

இவ்வாறான சிங்கள மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேச்சல் தரையை மீட்டுத் தருமாறு கோரி பண்ணையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் 26 நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் மேச்சல் தரை இன்றி தமது கால்நடைகள் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இனி பேச்சுவார்த்தை இல்லை – தமிழ் கட்சிகள் தீர்மானம்

videodeepam

யாழ்ப்பாணம் தீவக வெண்புறவி குடியேற்றத் திட்டத்தில் பாலியல் தொந்தரவு – ஒருவர் கைது!

videodeepam

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு

videodeepam