deepamnews
இலங்கை

இலங்கையர் ஒருவர் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இலங்கையரான சுஜித் பண்டார யட்டவர,  ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் சுஜித் பண்டார யட்டவர, கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமற்போயுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

அவரது பிள்ளைகளின் மரபணு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவரை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார  தெரிவித்துள்ளார்.

வென்னப்புவவை சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

Related posts

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை

videodeepam

யாழின் குடிநீர் பிரச்சினைக்கு ஐவர் கொண்ட குழு நியமனம்

videodeepam

ரஷ்யாவிலிருந்து மற்றுமொரு விமான சேவை நாளை மறுதினம் முதல் ஆரம்பம்

videodeepam