deepamnews
இலங்கை

ரஷ்யாவிலிருந்து மற்றுமொரு விமான சேவை நாளை மறுதினம் முதல் ஆரம்பம்

ரஷ்யாவின் ”ரெட் விங்ஸ்”(Red Wings) விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

ரெட் விங்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக 404 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார்.

அசூர் மற்றும் ஏரோப்ளோட் விமான நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளன.

ரெட் விங்ஸ் மூலம் இலங்கைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரஷ்யா – இலங்கை இடையில் 03 நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பெற்றோல் தட்டுப்பாடு..? ; மீண்டும் எரிபொருள் வரிசையில் மக்கள் !

videodeepam

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு

videodeepam

மின் கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை நீக்கவும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கோரிக்கை  

videodeepam