deepamnews
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக இன்று திவுலப்பிட்டியவிலிருந்து கொழும்பிற்கு பேரணி.

பல்வேறு மின்சார சேவை தொழிற்சங்கங்கள் மின்சார சபையின் வருடப்பூர்த்திக்கு இணையாக ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்று (01) முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

திவுலப்பிட்டியவிலிருந்து கொழும்பிற்கு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திவுலப்பிட்டியவில் இருந்து மின்சக்தி அமைச்சு வரை முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சிக்கின்றனர் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  

இன்றைய எதிர்ப்பு பேரணி தொடர்பில் மின்சாரத்தை பயன்படுத்தும் சங்கத்தினர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எதிர்ப்பு பேரணி தொடர்பில் திவுலப்பிட்டிய நகரில்  துண்டுப்பிரசுரங்கள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன.  

Related posts

வங்கி முறைமைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதி – அனுரகுமார திஸாநாயக்க குற்றசாட்டு

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்பிற்கு 4 அமைப்புகளுக்கு அனுமதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam

80 இலட்சம் முட்டைகள் சதொசவுக்கு விநியோகம்.

videodeepam