deepamnews
இலங்கை

சமஷ்டி’ தீர்வே எமக்கு வேண்டும்   – நல்லூர் கிட்டு பூங்காவில் திரண்ட மக்கள்.

இலங்கையில் வடக்கு – கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் நேற்று  நடைபெற்றது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க. லவகுசராசா தலைமையில் வடக்கு – கிழக்கிலிருந்து வருகை தந்த பெருமளவிலான மக்களின் பங்கேற்புடன் நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு – கிழக்கு  ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்  கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய 100 நாள் செயல் முனைவின் இறுதி நாளான 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி  வடக்கு – கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டும்” எனும் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டு ஓராண்டு பூர்த்தி நாளான நேற்று வடக்கு – கிழக்கு மக்களின் பங்கேற்புடன்  “இலங்கையின் வடக்கு – கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம்” எனும் கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், வடக்கு – கிழக்கு வாழ் பொதுமக்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

13 ஆம் திருத்தம் தொடர்பில் ரணில், தினேஷ், மஹிந்த ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் – அநுரகுமார கோரிக்கை

videodeepam

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

videodeepam

சுற்றுலா ஹோட்டல்களுக்கு ஜனாதிபதி ஆய்வு விஜயம்

videodeepam