deepamnews
சர்வதேசம்

இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு.

இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை தென்னாபிரிக்கா சுமத்தியுள்ளது.

இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தை செய்து வருவதாக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

காஸாவில் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக அக்குற்றச்சாட்டில் தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் பல போர் குற்றங்களைச் செய்வதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், தென்னாபிரிக்கா இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.

பொதுமக்களை பாதுகாக்குமாறு பல நாடுகளும் வலியுறுத்திய போதும், காஸாவில் இதுவரை 21 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Related posts

குடியுரிமையை பெறுவதற்காக  அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் ரஷிய கர்ப்பிணிகள்

videodeepam

துருக்கியில் நேற்று  நிலநடுக்கம் – உயிர்சேதங்கள் ஏதும் இல்லை என அறிவிப்பு

videodeepam

உக்ரைனின் 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா!

videodeepam