deepamnews
இந்தியா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  பிரதமர் மோடி சாமி தரிசனம்!

பிரசித்தி பெற்றதும், 108 வைணவத்தலங்களுள் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை தமிழகம் சென்ற பிரதமர், சென்னையில் 2023 ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

தமிழக பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சி சென்ற பிரதமர், அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலமாக பஞ்சகரை சாலைக்கு சென்று அங்கிருந்து வீதிவழியாக ஸ்ரீரங்கம் கோயிலை அடந்தார்.

அங்கு அவர் முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்தார்.

Related posts

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழகிரி வலியுறுத்தல்.

videodeepam

பாதுகாப்பு நிதி என்பது அரசுத்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் – இந்திய  பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

விசாகப்பட்டினத்தில் ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

videodeepam