deepamnews
இலங்கை

விடுதலைக்காக ஒன்றிணைந்து பயணிப்போம் – தமிழரசின் புதிய தலைவர் சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு.

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தேசியத்தோடு இணைந்து வரக்கூடிய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு எங்களுடைய மக்களின் விடுதலைக்காக புதிய விடுதலை பாரம்பரியத்தை முன்னெடுக்கவுள்ளோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் எம்.பி. நேற்று திருகோணமலையில் தெரிவித்தார்.

“எங்களுடைய பங்கு – பணி என்பது இனம் சார்ந்தது, தமிழ்த் தேசியத்தினுடைய இருப்பு சார்ந்தது, எங்களுடைய இனத்துக்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது. அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து பயணிப்போம்.” –  என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“என்னைத் தெரிவு செய்வதற்குக் காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும், எனக்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அயராது உழைத்தவர்களுக்கும், மிகப் பெறுமதியான வாக்குகளால் என்னைத் தலைவராகத் தெரிவு செய்த பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.

கட்சி தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிக அக்கறையுடன் செயற்பட முன்வரும் நிலை உருவாகியுள்ளது.

என்னுடன் போட்டியிட்ட நண்பர்களான எம்.ஏ.சுமந்திரன்,  சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கட்சி செயற்பாட்டை இன்னும் பல வழிகளில்,  எமது மக்களின் உரிமைக்காக, தேசிய இருப்புக்காக, தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் பொறுப்புடன் செயற்படுவோம்.” – என்றார்.

Related posts

நாணய நிதியத்தின்  முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி ரணில் முக்கிய கலந்துரையாடல்

videodeepam

செட்டியார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயம்

videodeepam

மிக வேகமாக குறைவடைந்து வரும் பணவீக்கம்:  மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam