deepamnews
இலங்கை

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் சாவு!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று  அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சாவடைந்துள்ளார். அவரின் பாதுகாப்பு அதிகாரியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஜீப் ரக வாகனம், முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதி, வீதிப் பாதுகாப்பு வேலியிலும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜீப்பில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இராஜாங்க அமைச்சரும், ஜெயக்கொடி என்ற பொலிஸ் கான்ஸ்டபிளும் உயிரிழந்தனர். சாரதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஆர். 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சாவடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல்வாதிகள் பலரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ராஜபக்ஷக்களின் நெருங்கிய சகாவான சனத் நிஷாந்த, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

கொழும்பு – காலிமுகத்திடலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டக்காரர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் சனத் நிஷாந்தவின் பெயரும் பதிவாகியுள்ளது. நீதிமன்றங்களில் அவருக்கு எதிராகப் பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

Related posts

திலினி பிரியமாலியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

videodeepam

கொழும்பில் திடீர் குழப்பத்திற்கு மத்தியில் ஏற்றப்பட்டது நினைவுச்சுடர்!

videodeepam

நாட்டில் ஆங்காங்கே உருவாகியுள்ள கோஷ்டி மோதல்களை தடுக்க சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் கலிலூர் ரஹ்மான்.

videodeepam