deepamnews
இலங்கை

19 ஆவது தடவை வெளிநாட்டுப் பயணத்துக்கு தயாராகிறார் ஜனாதிபதி ரணில்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார் எனக் கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தன.

இந்த நிலையில் தமது 17 மாத ஆட்சிக் காலத்தில் தமது 19 ஆவது வெளிநாட்டுப் பயணத்துக்குத் தயாராகி விட்டார் அவர் என்று கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் கடந்த 17 மாதங்களில் 18 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

இந்த செலவுகள் மற்றும் ஜனாதிபதியின் ஏனைய செலவினங்களுக்காக வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு அப்பால் 200 கோடி ரூபாவை ஜனாதிபதி மேலதிகமாக ஒதுக்கியுள்ளார் என அநுரகுமார திஸாநாயக்க கூறியிருந்தார்.

ஜனாதிபதி கடந்த 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை சுவிட்சர்லாந்து மற்றும் உகண்டா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த வேளையிலேயே நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

இப்போது, ஜனாதிபதியின் 19ஆவது வெளிநாட்டுப் பயணம் தொடர்பிலான விவரங்கள் குறித்துத் தெரியவருகிறது. இம்முறை அவர் ஆஸ்திரேலியாவை தெரிவுசெய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் பெப்ரவரி 9 ஆம் திகதி நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

Related posts

வரவு செலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நாடு திரும்புகின்றார் பசில்

videodeepam

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை – நிர்வாகம் அனுமதி வழங்கியதா?

videodeepam

சமுர்த்தி வங்கி தொடர்பில் அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு

videodeepam